×

மான்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டித்த ஹாரி மகுவேர்

லண்டன்: இங்கிலாந்து கால்பந்து அணியின் பின்கள வீரரான பிரபல ஹாரி மகுவேர் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான தனது ஒப்பந்தத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்துள்ளார். மகுவேர் லெய்செஸ்டர் அணியிலிலிருந்து 97 மில்லியன் டாலர் ஏலத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கடந்த 2019ம் ஆண்டு இணைந்தார், உலகளவில் கால்பந்து பின்கள வீரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாக இது விளங்கியது. இந்த அணிக்காக மகுவேர் 266 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவர் பங்கேற்ற எப்ஏ கோப்பை, லீக் கோப்பைகளை இந்த அணி கைப்பற்றியுள்ளது. அந்த அணியின் முன்னாள் மேனேஜர் எரிக் டென் ஹக்குடனான மோதலால் இவர் கடந்த 2023ம் ஆண்டு அணியிலிருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் மான்செஸ்டர் அணி அவரது ஒப்பந்தத்தை தற்போது புதுப்பித்துள்ளது. இன்னும் ஒருவருட காலம் அவர் அந்த அணிக்காக மீண்டும் களமிறங்குவார்.

Tags : Harry Maguire ,Manchester United ,London ,England ,Maguire ,Leicester ,
× RELATED மகளிர் ஹாக்கி அணி டூர் உறுதியானது:...