×

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..!

கவுகாத்தி: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் 19வது தொடரின் 13வது போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. தொடர் மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில், சுமார் 2.30 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டும், 3.2 ஓவர் பவர் பிளேயாகவும் மாற்றப்பட்டு டாஸ் போடப்பட்டது. டாஸை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணி பேட் செய்ய களமிறங்கியது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பாக அணி நான்ட்ரே பர்கர், சந்தீப் சர்மா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Tags : IPL Cricket ,Rajasthan ,Mumbai ,Guwahati ,IPL T20 ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு...