×

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்பட 131 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு, ஏப். 8: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 131 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கபட்டு, 71 மனுக்கள் ஈரோடு, ஏப். 8: ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 131 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு, 71 மனுக்கள் நிராகரிக்கபட்டன. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த 30ம் தேதி முதல் 6ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 202 வேட்பாளர்கள், 273 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நடந்தது. இந்த பரிசீலனையின் போது அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். வேட்புமனு பரிசீலனையின்போது, ஒவ்வொரு வேட்பாளரின் பெயர்களும் வரிசையாக படிக்கபட்டு வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை அறிவித்தனர். ஒரே வேட்பாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அவர்களது ஒரு மனுவை ஏற்று, பிற மனுக்கள் நிராகரிக்கபட்டன. தொகுதி வாரியாக ஏற்கபட்ட வேட்பு மனுக்கள் மற்றும் நிராகரிக்கபட்டன மனுக்களின் விவரம் பின்வருமாறு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் 10 பேர், மாற்று வேட்பாளர் 4 பேர், சுயேட்சைகள் 13 பேர் என 27 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேரின் மனுக்கள் நிராகரிக்கபட்டன. 24 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஈரோடு மேற்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் 12 பேர், மாற்று வேட்பாளர் 4 பேர், சுயேட்சைகள் 8 பேர் என 24 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கபட்டன 15 பேரின் மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. மொடக்குறிச்சி தொகுதியில் அரசியல் கட்சியினர் 8 பேர், மாற்று வேட்பாளர் 5 பேர், சுயேட்சைகள் 7 பேர் என 20 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 6 பேரின் மனுக்கள் தநிராகரிக்கபட்டன. 14 பேரின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன.

பெருந்துறை தொகுதியில் அரசியல் கட்சியினர் 7 பேர், மாற்று வேட்பாளர் 5 பேர், சுயேட்சைகள் 10 பேர் என 22 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரின் மனுக்கள் நிராகரிக்கபட்டன. 14 பேரின் மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. பவானி தொகுதியில் அரசியல் கட்சியினர் 18 பேர், மாற்று வேட்பாளர் 4 பேர், சுயேட்சைகள் 4 பேர் என 26 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 19 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்தியூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் 14 பேர், மாற்று 6 பேர், சுயேட்சைகள் 14 பேர் என 34 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அரசியல் கட்சியினர் 7 பேர், மாற்று வேட்பாளர் 6 பேர், சுயேட்சைகள் 17 பேர் என 30 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பவானிசாகர் தொகுதியில் அரசியல் கட்சியினர் 7 பேர், மாற்று வேட்பாளர் 5 பேர், சுயேட்சைகள் 7 பேர் என 19 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன்படி, மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் 83 பேர், மாற்று வேட்பாளர் 39 பேர், சுயேட்சைகள் 80 பேர் என மொத்தம் 202 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், மாற்று வேட்பாளர், கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட 71 மனுக்கள் நிராகரிக்கபட்டன. 131 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Tags : DMK ,AIADMK ,Congress ,BJP ,Erode ,Erode district ,
× RELATED கோபியில், நாளை மறுநாள் ஒமேகா ஈவண்ட்ஸ் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி