- விஜயமங்கலம் பாரதி பள்ளி
- பெருந்துறை
- விஜயமங்கலம் பாரதி சர்வதேச மேல்நிலைப் பள்ளி
- மோகனாம்பாள்
- முதல்வர்
- செந்தில்குமார்
- உமாதேவி
- ரீனா உமாசங்கர்
பெருந்துறை, ஏப்.9: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பாரதி இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மோகனாம்பாள் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைவர் உமாதேவி வரவேற்றார். முதல்வர் ரீனா உமாசங்கர் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் கல்யாணி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் கடந்த ஆண்டு நடந்த சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், பாரதி உற்சவ்-26 ஔவை சொல்லும் அமுத மொழியும் என்னும் தலைப்பில், தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில், ஆத்திச்சூடி வரிகளில் நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
