ஈரோடு, ஏப்.9: ஒமேகா ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பில் கோபி-ஈரோடு ரோட்டில் உள்ள சீதா கல்யாண மண்டபத்தில் மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுநாள் (11ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஆலோசனைகளை வழங்குகிறார். இது தொடர்பாக ஒமேகா ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகள் பிளஸ்-2, 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு உயர்கல்விக்கு என்ன படிக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். பல்வேறு கல்வி நிறுவனங்களின் படிப்புகளை பற்றி ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக மாணவ-மாணவிகள் எங்கு படிக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினர்.
