மொடக்குறிச்சி, ஏப். 7: மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.
மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான சாவடிபாளையம் புதூர், பஞ்சலிங்க புரம், நஞ்சை கொளாநல்லி, வெள்ளோட்டாம்பரப்பில் தேர்தல் பார்வையாளர் ராகேஷ் சந்திர கலாசாகர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பதட்டமான வாக்கு சாவடிகளும் அடங்கும். மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்தார்.
வாக்கு பதிவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் வினோதினி, மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
