×

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1404 புகார்கள் வந்துள்ளன

ஈரோடு, ஏப். 8: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1,404 புகார்கள் வரப்பெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் தொடர்பான புகார்கள்,வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்க டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1,404 புகார்கள் வரப்பெற்றன. ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் தொடர்பான புகார்கள், வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 மற்றும் வாட்ஸ் ஆப் குறுந்தகவல் மூலம் தொடர்பு கொள்ள 90425 80535, தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை 0424-2267670, 2267673, 2267674, 2267675, 2267679 என்ற எண்களுடன் 24 மணி நேரமும் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும், வாக்காளர் உதவி எண் 1950 மற்றும் சிவிஜில் ஆப் மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது. இதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 1,404 புகார் வரப்பெற்றன. அதில், 1,403 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தேர்தல் தொடர்பான பிரசாரம், ஊர்வலம், கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக சுவிதா தளத்தில் மூலமாக 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 688 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 129 விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags : District Election Control Room ,Erode ,Election Control Room ,Erode district ,8 ,Assembly… ,
× RELATED மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும்...