ராஜபாளையம், ஏப். 7: மாரியம்மன் கோயிலில் நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக முத்துக்கூடன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் காலை பூஜைகளை முடித்து விட்டு கதவுகளை வழக்கம் போல் சாத்தி வைத்து சென்றார். மீண்டும் மாலையில் வந்து பார்த்தபோது அம்மன் உள்ளிட்ட சிலைகளில் இருந்த 14 கிராம் எடையுள்ள தங்க நகைகள் காணவில்லை.
இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்ததில், காவி வேஷ்டி அணிந்திருந்த மர்மநபர் பக்தர் போல் வந்து நகைகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
