×

ஏடிஎம் எண் சொல்லாதீங்க…

 

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.7: அலைபேசியில் ஏடிஎம் கார்டு எண் கேட்டு பணத்தை பறிக்கும் கும்பலின் அட்டூழியத்தால் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், போனில் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் வங்கி ஏடிஎம் குறித்த விபரங்கள் கேட்டால், அது குறித்து நேரடியாக வங்கிக்கு சென்று தெரியப்படுத்துகிறோம் எனக் கூறி போனை துண்டிக்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து எந்த விபரமும் கேட்கப்படுவதில்லை என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. போனுக்கு மெசேஜ் மூலம் வரும் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனர்.

Tags : R.S. Mangalam ,
× RELATED 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்