×

மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்

 

 

சிங்கம்புணரி, ஏப்.7: சிங்கம்புணரி அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர்.சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் காப்பு கட்டி தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. கடந்த 3ம் தேதி பால்குடம் கிடாவெட்டு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முதலாவதாக கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அதை தொடர்ந்து சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை இளைஞர்கள் விரட்டிப் பிடித்தனர். காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சு விரட்டுக்கான பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags : Singampunari ,Panguni Pongal ,Kannamangalapatti Pattatharasi ,Amman ,temple ,
× RELATED 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்