×

வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

 

கொடைக்கானல், ஏப். 7: கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கோம்பைகாடு, கடமன்றேவு ஆகிய ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராமங்களில் கடந்த தேர்தலில் குறைவான வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இந்நிலையில் இப்பகுதியை மலைக்கிராம மக்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றிய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் குடிமை பொருள் தனி வட்டாட்சியார் காந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார இயக்க மேலாளர் தங்கராணி, வருவாய் அலுவலர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்ணன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kodaikanal ,Kombaikadu ,Kadamandrevu ,Vadakaunchi panchayat ,
× RELATED 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்