×

உடுமலை திமுக வேட்பாளர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

 

 

உடுமலை, ஏப். 7: உடுமலை தொகுதி திமுக வேட்பாளர் மு.ஜெயக்குமார் நேற்று பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக ஈஸ்வரசாமி எம்பி பிரசாரம் செய்தார்.
குடிமங்கலம் கிழக்கு ஒன்றியம் அப்பிலிபட்டியில் பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து கள்ளப்பாளையம், ரங்கமாபாளையம், பெரியபட்டி, வெள்ள செட்டிபாளையமை, குப்பம்பாளையம், ஆமந்தகடவு, அம்மாபட்டி, பூளவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். மாலை 4 மணிக்கு சமத்தூர் பேரூரில் பிரசாரத்தை துவங்கிய அவர், பொள்ளாச்சியூர், கலைஞர் நகர், ஆவல் சின்னாம்பாளையம், ஜமீன் கோட்டாம்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து, இரவு வஞ்சிபாளையத்தில் நிறைவு செய்தார்.
திமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளையும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளருடன் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஈஸ்வரசாமி எம்பி, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜமாணிக்கம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிட்டுசாமி மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

Tags : Udumali Timuka ,Udumalai ,Udumalai Constituency ,Mu. ,Jayakumar ,Iswarasamy ,CIUDMANKALAM EASTERN UNION ,APILIBAR ,Kallappalayam, ,Rangamapalayam ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி