×

அவிநாசி அரசு கலை கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 

 

அவிநாசி, ஏப். 7: அவிநாசி அரசு கலைஅறிவியல் கல்லூரியில் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமை வகித்தார்.சாலை பாதுகாப்பு குழுத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர்கள் மணிகண்டன், தியாகராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் சாலை விதிமுறைகள், பாதுகாப்பான பயணம் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கும் காணொலி திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம், கோலப்போட்டி, ஓவியப்போட்டி வாசகங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சிறந்த முறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Tags : Avinashi Government Arts College ,Avinashi ,Avinashi Government Arts and Science College ,Principal ,Hemalatha ,Road Safety Committee ,Balamurugan ,Manikandan ,Thiagarajan ,
× RELATED காங்கயத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி