×

தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் திரையிடல்

 

கோத்தகிரி,ஏப்.7: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் பழங்குடியின வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள், வாக்காளர்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் கோலப்போட்டி, விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, வாக்காளர்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தியும் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி பேருந்து நிலையம் மற்றும் கட்டபெட்டு ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஏராளமாக வாக்காளர்கள் பார்வையிட்டு நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர்.

Tags : Kotagiri ,Tamil Nadu Assembly General Election 2026 ,Tamil Nadu Assembly General Election ,
× RELATED கள்ளக்காதலியுடன் தகராறு ஓட்டல் தொழிலாளி தற்கொலை