×

வாலாஜாபாத் பேரூர் ராஜவீதி பகுதியில் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திமுக வேட்பாளர் க.சுந்தர் பிரசாரம்

வாலாஜாபாத், ஏப்.7: வாலாஜாபாத் பேரூர் ராஜவீதி பகுதியில் திமுக அரசு கொண்டுவந்த பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளருமான க.சுந்தர், நேற்று வாலாஜாபாத் பேரூர் 14வது வார்டு ராஜவீதி, ஸ்ரீபெரும்புதூர் சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள கடைகள், காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், உணவகங்கள் என பல்வேறு கடைகளில் உள்ள வியாபாரிகளிடம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திராவிட மாடல் அரசில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன், கலைஞர் காப்பீடு, வீட்டுமனை பட்டாக்கள், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வழங்கி வேட்பாளர் சுந்தர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Valajabad Barur Rajavethi ,Dimuka ,K. Sundar Prasaram ,Valajabad ,Uttaramarur Assembly Constituency ,K. Sundar ,Uthramarur Assembly Constituency ,Kanchipuram District ,
× RELATED மப்பேடு பகுதியில் ₹1,400 கோடி செலவில் பல்திறன் சரக்கு போக்குவரத்து பூங்கா