×

மதுபோதையில் திருட சென்றவர் கைது

 

குன்றத்தூர், ஏப்.6: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மதுரை (60). இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராஜகுமாரி நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மதுரை மற்றும் அவரது மகள்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதீத குடிபோதையில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பீரோவை திறந்து பணத்தை எடுத்தபோது திடீரென சத்தம் கேட்டு மதுரை எழுந்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்தார். அவரிடம் இருந்து ஒரு ஐபோன் மற்றும் 200 ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பது தெரிய வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kundrathur ,Madurai ,Puliyanthoppu ,Rajakumari ,Athi… ,
× RELATED மாவட்ட தலைநகரான செங்கல்பட்டை முதன்மை நகராட்சியாக உயர்த்துவதே லட்சியம்