×

செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன்

செங்கல்பட்டு, ஏப்.5: செய்யூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எ.ராஜசேகர் நேற்று செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட லத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் அடங்கிய நீலமங்கலம், சீவாடி, பேக்கரணை, புன்னம்மை, சாத்தமங்கலம், கல்குளம், வடக்கு வாயலூர், மடவிளாம், தொண்டமாநல்லூர், காதராபாக்கம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கொளுத்தும் வெயிலில் தெருத்தெருவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதேபோன்று பரசுங்கநல்லூர், செம்பூர், தண்டரை, திருமால் நகர், நத்தம், பரமேஸ்வர மங்கலம் ஆகிய பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘செய்யூர் தொகுதிக்குட்பட்ட பின் தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்’. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் பெற்று தரப்படும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும், அனைத்து பயன்களையும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு கிடைக்க முழுமுதல் முயற்சி எடுப்பேன்.

பெண்களுக்கான சலுகைகளை உடனுக்குடன் பெற்று தருவேன். செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் பகுதியில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைவதற்கு பாடுபடுவேன். அணைக்கட்டு பகுதியில் அனைத்து வசதிகளும் கூடிய அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையை உருவாக்குவேன். கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் எளிதில் சென்று வர புதிய அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பேன். பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பேன், என இவ்வாறு பேசினார். இதில், அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், லத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு, பாமக மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட துணை செயலாளர் கருணாகரன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் கூவத்தூர் சகாதேவன், அதிமுக ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆகாஷ் உள்பட பாமக, அதிமுக, பாஜ, அமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Paunjur ,Seyyur assembly ,Chengalpattu ,AIADMK ,Seyyur ,A. Rajasekhar ,Neelamaangalam ,Seevadi ,Bekkaranai ,Punnammai ,Sathamangalam ,Kalkulam ,Vadakku Vayalur ,Madavilam ,Thondamanallur ,Kadarapakkam ,Anikuttu ,Latur East ,
× RELATED மாவட்ட தலைநகரான செங்கல்பட்டை முதன்மை நகராட்சியாக உயர்த்துவதே லட்சியம்