×

டிரைவர் மீது தாக்குதல்

குன்றத்தூர், ஏப்.7: மணலி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (44), மாநகர போக்குவரத்துக் கழகம் வியாசர்பாடி பணிமனையில் ஓட்டுனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியில் இருந்து பேருந்தை கடற்கரை நோக்கி ஓட்டி சென்றார். எம்கேபி நகர் மேம்பாலம் ஆதிபராசக்தி கோயில் வழியாக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மதுபோதையில் பேருந்தை மடக்கி தகராறில் ஈடுபட்டு ஓட்டுநர் கார்த்திகை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபரை தேடி வருகின்றனர்.

Tags : Kundrathur ,Karthik ,J.J. Nagar ,Manali ,Vyasarpadi ,Municipal Transport Corporation ,Kaviyarasu Kannadasan Nagar ,
× RELATED மப்பேடு பகுதியில் ₹1,400 கோடி செலவில் பல்திறன் சரக்கு போக்குவரத்து பூங்கா