×

காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா

தஞ்சாவூர், ஏப். 6: தஞ்சாவூர் நகரத்தார் சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வரும் காரைக்கால் அம்மையார் குருபூஜை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பிள்ளையார் வழிபாடு, அதை தொடர்ந்து சங்கத் தலைவர் சிவ விஸ்வநாதன் வரவேற்புரை. பின்பு திருமுறை விண்ணப்பம் ஓதுவார் சிவத்திரு சாண்டிலியன், புனிதன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து காரைக்கால் அம்மையார் பற்றி ஒரு தொகுப்பு அம்பிகா விஜயராஜன் வழங்கினார்.

மேலும் காரைக்கால் அம்மையாரின் பதிகங்கள் முற்றோதல் நகரத்தார் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. தலைவர் விஸ்வநாதன், செயலாளர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் சண்முகம், தஞ்சாவூர் நகரத்தார் சங்கம் சார்பாக சீரும் சிறப்புடன் காரைக்கால் அம்மையார் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் கலந்து கொண்டு காரைக்கால் அம்மையாரின் இறை அருள் பெற்றனர்.

 

Tags : Karaikal Ammaiyar Guru Pooja Festival ,Thanjavur ,Thanjavur Nagarathar Sangam ,Pillayar ,Sangam ,President ,Siva Viswanathan ,Thirumurai ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 150...