×

உவரி அருகே வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.58 ஆயிரம் பறிமுதல்

நெல்லை, ஏப். 6: உவரி அருகே வாகன சோதனையின் போது காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.58 ஆயிரத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி அகஸ்டஸ் அலெக்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உவரி அருகேயுள்ள குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உவரி முதல் திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையில் அவர்கள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது பாதுகாப்புப் பணிக்காக போலீசாரும் உடன் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஸ்ரீராமன் என்பவர் பயணம் செய்தார்.

அவர் காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப்பணம் கொண்டு சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.58,400ஐ கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை ராதாபுரம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், வட்டாட்சியருமான மாரிசெல்வத்திடம் அவர்கள் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப்

 

Tags : Uvari ,Nellai ,
× RELATED வாலிபரை தாக்கியவர் கைது