×

பொன்னமராவதி பகுதியில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பொன்னமராவதி,ஏப்.6: பொன்னமராவதியில் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார். திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னமராவதி தாலுகாவில் 116 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. இதில் அரசமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நகரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தூத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொப்பனாபட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் சோட்டே சிங் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் வாக்குச்சாவடி மையங்களில் மின்சார இணைப்பு, மின்விசிறி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தும் சாய்வு தளப் பாதை போன்ற அத்தியாவாசிய வசதிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருமயம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் பொன்னமராவதி வட்டாட்சியருமான பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளர்கள் ஈஸ்வரி, சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Tags : Ponnamaravathi ,Thirumayam assembly ,Arasamalai Panchayat Union Primary School ,Nagarpatti Panchayat Union Primary School ,Thoothur Panchayat Union… ,
× RELATED சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 150...