×

தங்கையை தாக்கிய அண்ணன் கைது

கோவை,ஏப்.5: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள மணியக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் விஜயராஜா (47). இவரது சகோதரி ரேவதி (43). விஜயராஜா தனது தங்கை ரேவதியின் பெயரில் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 2ம் தேதி ரேவதி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த விஜயராஜா மீண்டும் ரேவதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதில் ஆத்திரம் அடைந்த விஜயராஜா, தனது தங்கை ரேவதியை சரமாரியாக தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த டிவியை உடைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

Tags : Coimbatore ,Vijayaraja ,Maniyakkaran ,Palayam ,Saravanampatti ,Revathi ,
× RELATED கோவை நவஇந்தியா பகுதியில் 5வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி