×

மதுபானம் விற்ற 2 வாலிபர்கள் கைது

தோகைமலை, ஏப். 5: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பாதிரிபட்டி ரோட்டில் பகுதியில் மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக தோகைமலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்அதன்பேரில் தோகைமலை போலீசார் அங்கு சென்று ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடை பனஞ்சாவயல் பழனி மகன் பரதீஷ் (24) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பொதுவக்கூர் செல்வகுமார் மகன் ரஞ்சித்குமார் (29).

ஆகிய இருவரும் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியிலிருந்த போலிசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பிரதீஷ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

 

Tags : Thogaimalai ,Pathiripatti Road ,Karur district ,Thiruvadai ,Ramanathapuram district… ,
× RELATED கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெருகி வரும் தெருநாய்கள்