- பாக்
- காஷ்மீர்
- இந்தியா
- அகல் இந்திய இமாம் அமைப்பு
- ஸ்ரீநகர்
- பாக்கிஸ்தான்
- இமாம்
- உமர் அகமது இலியாசி
- ஜம்மு
ஸ்ரீநகர்: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர விரைவில் இந்தியாவுடன் இணையும்” என அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, “ஜம்மு காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாற்றமடைந்து வருவது மகிழ்ச்சி தருகிறது.
தற்போதைய காஷ்மீர் சிறப்பானதாக மாறி விட்டது. இங்குள்ள இளைஞர்களும், குழந்தைகளும் கல்லெறியும் காலம் முன்பிருந்தது. தற்போது அவர்கள் கைகளில் பேனா உள்ளது. சுற்றுலாவும் பெருகி காஷ்மீர் செழிப்பாக உள்ளது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் இந்தியாவுடன் இணைய வேண்டுமென விரும்புகிறார்கள். அது விரைவில் நடக்கும்” என்று தெரிவித்தார்.
