×

ரஷ்யாவில் எஸ்யு-30 போர் விமானம் விழுந்து விபத்து

மாஸ்கோ: ரஷ்யாவில் எஸ்யு-30 என்ற ராணுவ விமானம் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. ரஷ்ய ராணுவத்தில் உள்ள ஏஎன்-26 என்ற மிக பழமையான போக்குவரத்து விமானம் கடந்த 31ம் தேதி கிரிமியாவில் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 22 பயணிகள், 7 பணியாளர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் எஸ்யு-30 என்ற போர் விமானம் கிரிமியாவில் நேற்று வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Russia ,Moscow ,Crimea ,
× RELATED பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில்...