×

இங்கிலாந்து விஸ்கிக்கு 50% வரி விலக்கு: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி கையெழுத்தானது. இந்த நிலையில், கேமரூன் நாட்டில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் 14ம் அமைச்சர் மட்டத்திலான மாநாட்டில், இங்கிலாந்து வர்த்தகத் துறை அமைச்சரை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அவர் கூறுகையில், ‘இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 30 முதல் 45 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும். சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் பணியாற்றும் இந்தியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை அந்நாட்டு சமூக பாதுகாப்பு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஓமன் நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம் வரும் மே 1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும். நியூசிலாந்து நாட்டுடன் ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கனடாவுடனான பேச்சுவார்த்தை வேகப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

Tags : Union ,New Delhi ,India ,UK ,14th Ministerial Conference ,World Trade Organization ,Cameroon ,
× RELATED திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது...