×

ஒரே கூட்டணியில் 2 கட்சி வேட்பாளர்கள்

விருத்தாசலம், ஏப். 2: வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி அந்தந்த கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பாமக ராமதாஸ் அணியின் வேட்பாளராக தொழிலதிபர் சுரேஷ் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வாக்குகள் சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அதே கூட்டணியில் உள்ள அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சவுந்தர்ராஜன் வேட்பாளராக அக்கட்சி நேற்று அறிவித்துள்ளது. ஒரே கூட்டணியில் உள்ள 2 கட்சிகள் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட இந்த தகவல் விருத்தாசலம் தொகுதி கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Virudhachalam ,Suresh ,PMK Ramadoss ,
× RELATED போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை துவக்கம்