×

தேர்தல் விதிமுறைகளை மீறி கடலூர் மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற கோரிக்கை

கடலூர், ஏப். 2: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பொது இடங்களில் உள்ள பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் பேனர்கள் மட்டும் அகற்றப்படவில்லை. அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், கடலூர் பல பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கடலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்பேரில், கடலூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் இரவோடு இரவாக போலீசார் அகற்றினர். இந்நிலையில் தற்போது 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் தனியார் வணிக நிறுவனங்கள் மூலம் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் தனியார் அமைப்புகள் மூலம் வைப்பதற்கான காரணம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், அந்த பேனர்களை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Tags : Cuddalore Corporation ,Cuddalore ,Tamil Nadu ,District Election Officer ,CP ,Aditya Senthilkumar ,
× RELATED ஒரே கூட்டணியில் 2 கட்சி வேட்பாளர்கள்