×

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பொது பார்வையாளர் ஆய்வு

இளம்பிள்ளை, ஏப். 1: சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பொது பார்வையாளர் ஜடேஜா நேற்று வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது வாக்காளர்களை சந்தித்தவர், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags : Veerapandi Assembly ,Ilampillai ,Election General ,Jadeja ,Salem district ,
× RELATED சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு