×

பார் கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல்

 

கோவை, மார்ச் 31: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருக்கான தேர்தல் நேற்று நடந்தது. 23 உறுப்பினர்களுக்கான தேர்தலில் தமிழகம் முழுவதும் 143 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து வாக்களிக்க கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டில் வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை கோர்ட்டில் 3 வாக்குசாவடி மையங்களில் 4789 வக்கீல்களில், 3777 பேர் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த 2 மாதங்களில் நடக்க உள்ளது.

 

Tags : Bar Council ,Coimbatore ,Bar Council of Tamil Nadu ,Pondicherry ,Tamil Nadu ,Pollachi ,Mettupalayam ,Valparai… ,
× RELATED முதல்வரிடம் வேட்பாளர் வாழ்த்து: மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்