×

தரகம்பட்டியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

கடவூர், மார்ச் 31: தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் உள்ள கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பாக 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய மேலாளர் (பொது) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சத்துணவு திட்டத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தனர். இந்த பேரணியானது வையம்பட்டி-மைலம்பட்டி மெயின் ரோடு, முக்கிய வீதிகள், கடைவீதி வழியாக சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டது.

இதேபோல் 85 வயது பூர்த்தியடைந்த வயது முதிர்ந்தவர்களுக்கும், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுக்கும் அழைப்பிதழை வழங்கி, வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்து, தங்களது வாக்கினை அளித்து ஜனநாயக கடமையினை ஆற்ற வருகை தரவேண்டும். மேலும் ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் ஓட்டு அளிப்பது நமது கடமை, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்து வாக்களிக்க வேண்டும், 100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். பெண்கள் அனைவரும் கடமைகளுடன் வாக்களித்து நமது உரிமைகளைபெற வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து 100 சதவீதம் வடிவத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் அனைவரும் ஒன்று கூடி கோலங்கள் இடுவது, வரை படங்கள் வரைவது போன்ற நகழ்வுகள் மூலம் விழிப்புணர;வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சித்திட்ட பணியாளர்கள், வருவாய் துறை பணியாளர்கள், சத்துணவுத்திட்ட பணியாளர்கள், காலை உணவு திட்டப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Taragampatti ,Kadavur ,Kadavur Panchayat Union ,Rural Development Department ,Revenue Department ,Women’s Program… ,
× RELATED கரூரில் வேட்பு மனுதாக்கல்: துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு