×

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை இன்று தொடங்குகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை துணை முதலமைச்சர் உதயநிதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து இன்று தொடங்குகிறார். இன்று மாலை 6 மணிக்கு வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை காஞ்சிபுரத்தில் தொடங்க உள்ளார்.

பின்னர் 6 மணியளவில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதையடுத்து திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூர் தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். மேலும் துணை பொதுச்செயலாளர் கனிமொழி விரைவில் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

எனவே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரசாரம், வேட்புமனு தாக்கல் என அதிரடியாக களமாடி வருகிறது.

 

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Assembly elections ,Tiruvannamalai ,Udhayanidhi ,Assembly ,DMK ,Vandavasi ,Cheyyar ,Arani ,Assembly… ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...