×

இலவசமா புள்ள தர்ரேன்னு சொன்னா ஏத்துப்பியா? சீமான் சர்ச்சை, வீடியோ வைரல்

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். திருக்கோவிலூர் தொகுதியில் சீமான் பேசுகையில், ‘மானத்தை விட்டால், தமிழன் உயிரை விட்டுருவான்னு வாழ்ந்து வந்தோம். இன்று, அரைப்படி அரிசிக்கும், அரை கிலோ வெல்லத்துக்கும், ஒரு முழ கரும்புக்கும் மானத்தை விட்டு நிற்பது கேவலமா இல்லையா?.

நீ மானமுள்ள தமிழன் தானே? மிக்ஸி கொடுத்தான்னு பெருமையா வாங்கிட்ட, டிவி கொடுத்தான்னு வாங்கிட்டு, சேலை கொடுத்தான்னு வாங்கிட்டு, இலவசமா திருமணமும் பண்ணி வச்சிட்டான். எல்லாத்தையும் வாங்கிட்டு பெருமையா ஓட்டு போட்டியே, இலவசமா புள்ளை தாரேன்னு சொன்னா ஏற்பியா? இதை சொல்லும் போது எவ்வளவு வலிக்குது’ என்றார். சீமான் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Tags : Seeman ,Naam Tamilar Party ,Chief Coordinator ,Tamil Nadu Assembly ,Thirukovilur ,
× RELATED தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிந்தனை...