×

தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிந்தனை அரசியலை விட வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை

தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் பல தலைமுறையாக மத்திய-மாநில அதிகார மோதல்கள், மொழி அடையாளம், நலத்திட்டங்கள் போன்ற விவாதங்களைச் சுற்றியே இயங்கி வந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே போக்கு தொடரும் என்று அரசியல் வல்லுநர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் ஒரு முக்கிய மாற்றத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்களுக்கு இப்போது முதன்மைப் பிரச்சினை வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிதான்.

அரசியல் கொள்கை குறித்த விவாதங்கள் தொடர்ந்தாலும், இளைஞர்களின் கவனம் முழுக்க தங்களின் வாழ்வாதாரத்தை நோக்கி திரும்பியுள்ளது. தமிழ்நாடு என்றாலே அரசியல் ஈடுபாடு அதிகம் என்று அறியப்பட்டாலும், இன்று வாக்காளர்களின் அன்றாடக் கவலைகள் வேலை, வருமானம், எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.

இந்த மாற்றத்திற்கு மக்கள் தொகை அமைப்பே முக்கிய காரணம். தமிழ்நாட்டில் வேலை செய்யும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைகின்றனர். இதனால் வேலை உருவாக்கம் என்பது அரசியல் எல்லைகளைத் தாண்டிய மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இளைஞர்களுக்கு ஆட்சியின் வெற்றி-தோல்வியை அளவிடும் முக்கிய அளவுகோல் – பொருளாதார முன்னேற்றம்தான்.

இந்த உண்மையை டெய்லிஹன்ட் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பு தெளிவாகக் காட்டுகிறது. பிப்ரவரி 17 முதல் 28 வரை நடைபெற்ற இந்தக் கணிப்பில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கணிப்பில் முக்கியமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் கிரீன் காப்பர் ஆலையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக மீண்டும் திறக்க ஆதரவா? என கேட்கப்பட்டது
பதில் ஆச்சர்யம்கொடுத்துள்ளது – 86 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை வெறும் ஒரு தொழிற்சாலை பற்றிய கருத்து மட்டுமல்ல. அரசியல் மனநிலையிலேயே பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை இது காட்டுகிறது. பழைய கருத்தியல் வேறுபாடுகளை விட, வேலை வாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இளைஞர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.தூத்துக்குடியில் இந்த மாற்றம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலை இப்போது சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டும் இல்லாமல், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் பெண் வேலம்மாள் கூறுகிறார்:
“தொழிற்சாலை மூடப்பட்ட பிறகு எங்கள் அன்றாட வாழ்க்கையே பெரிதும் பாதிக்கப்பட்டது. தொழிற்சாலை மட்டுமல்ல, அதைச் சுற்றி இருந்த சிறு கடைகள், போக்குவரத்து, வாடகை வீடுகள் என முழு பொருளாதார அமைப்பும் பாதிக்கப்பட்டது. பல குடும்பங்கள் அதை நம்பித்தான் வாழ்ந்தன.”
உச்சகட்டத்தில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ₹20,000 கோடி வர்த்தகத்தையும், மாதத்திற்கு ₹5,000 கோடி வரை உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களித்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் 30 லட்சம் டன் சரக்குகளை இது கையாண்டது.

இப்போது முக்கியமான கேள்வி: தொழில் வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எப்படி சமநிலைப்படுத்துவது?
இதற்கு ‘Green Copper Framework’ என்ற புதிய மாதிரி முன்மொழியப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் முதன்மை உற்பத்தியும், 30 சதவீதம் scrap மற்றும் e-waste மறுசுழற்சியும் இணைக்கப்படும்.

மேலும், மேம்பட்ட மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள்,நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ₹10,000 கோடி சமூக முதலீட்டு நிதி ஆகியவை இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

மற்றொரு உள்ளூர் பொதுமக்கள் மரியப்பன் கூறுகிறார்:
“சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தொழிற்சாலை திறக்கப்பட்டால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பங்களின் வருமானம் உயரும். எங்கள் பகுதியின் எதிர்காலமே மாறும்.” காப்பர் என்பது இன்று மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கான முக்கிய மூலப்பொருள். உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இன்னும் அதிக அளவில் காப்பரை இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Green Copper திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் உள்ளூர் வாழ்வாதாரம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தினால், அது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும்.

தேர்தல் வாக்கு பதிவை நோக்கி தீவிரமடையும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டு இளைஞர்களின் குரல் ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது: வாழ்வாதார அரசியலை இனி எந்த அரசியல் கட்சியாலும் புறக்கணிக்க முடியாது.
இறுதியாக, பலரின் மனதில் ஒரே கேள்வி:
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும், வளர்ந்து வரும் தொழிலாளர் சக்தியையும் அரசியல் தலைவர்கள் உண்மையிலேயே புரிந்துகொண்டு நிறைவேற்ற முடியுமா என்பதே

Tags : Tamil Nadu ,
× RELATED தூர் வாரப்பட்ட பாசன கால்வாய் சிமெண்ட் தளமாக புனரமைப்பு