×

உத்தரப் பிரதேசத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஜேவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல்கட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த விமான நிலையத்தின் முதற்கட்டம் பொது தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் சுமார் ரூ.11,200 கோடி மொத்த முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத்தின்படி, தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய சர்வதேச நுழைவாயிலாகக் கருதப்படும் இந்த விமான நிலையம், நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பிராந்திய மற்றும் சர்வதேச இணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியாகும். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் துணையாக, நொய்டா சர்வதேச விமான நிலையம் டெல்லி என்சிஆர் பிராந்தியத்திற்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விரு விமான நிலையங்களும் இணைந்து ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்பட்டு, நெரிசலைக் குறைத்து, பயணிகளைக் கையாளும் திறன் விரிவடையும். மேலும், டெல்லி என்சிஆரை உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும். நொய்டா சர்வதேச விமான நிலையம், சாலை, ரயில், மெட்ரோ மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அமைப்புகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்புடன் பலமுனை போக்குவரத்து மையமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகள் மற்றும் சரக்குகளுக்குத் திறமையாக இணைப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,Noida International Airport ,Uttar Pradesh ,Lucknow ,Narendra Modi ,Jewar, Uttar Pradesh ,Civil Aviation Minister ,KCR ,Ram Mohan Naidu ,Governor ,Anandiben Patel… ,
× RELATED ஏப்ரல் 1 முதல் 900 அத்தியாவசிய...