×

ஏப்ரல் 1 முதல் 900 அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்

டெல்லி: இந்தியாவில் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்கிறது. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பின்படி, இந்த உயர்வு சுமார் 0.65% ஆக இருக்கும். மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் செலவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விலை உயர்வு மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ஏப்ரல் 1 முதல் 0.65% ஆக இருக்கும் என்றும், அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க உற்பத்தியாளருக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை. தற்போதைய நிலவரம் குறித்து ஒன்றிய அரசு நன்கு அறிந்திருப்பதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறிய கலானி, இந்த விலை உயர்வு 2022 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது என்றார். மேலும், மேற்காசிய மோதல்களின் தாக்கங்களை கையாளுவதற்காக ஏழு அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடிகளைத் தடுப்பதற்காக டீம் இந்தியா’ அணுகுமுறையில் ஒன்றிய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.

Tags : National Drug Pricing Commission ,Delhi ,India ,
× RELATED புதுச்சேரி நிகழ்ச்சியில் பங்கேற்பதை...