×

ரூ.11.35 லட்சம் அபேஸ் 3 பேர் மீது வழக்கு

மதுரை, மார்ச் 28: மதுரையில் இளைஞருக்கு மது வாங்கி கொடுத்து ரூ.11.35 லட்சத்தை அபகரித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் மலையம்மாள்(65). இவரது மகன் சரவணன்(37). மலையம்மாளுக்கு பணத்தேவை ஏற்பட்டதால் சரவணனிடம் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போனை கொடுத்து பணம் எடுத்து வர சொல்லியுள்ளார். அதை வாங்கிக் கொண்டு சென்றவர் நண்பர்களுக்கு ரூ.42 ஆயிரம் வரை கடன் வழங்கியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த சிந்துகணேஷ் (எ) சூரியா(29), கல்மேடு அருண்(30) மற்றும் மணிகண்டன் ஆகியோர் சரவணனை அழைத்து சென்று அவருக்கு மதுவாங்கி கொடுத்துள்ளனர். பின்னர், சரவணனிடம் இருந்த ஏடிஎம் கார்டு மூலமாக ரூ.11.37 லட்சத்தை அபகரித்துள்ளனர். மேலும் ஏடிஎம், செல்போனை பறித்துக்கொண்டு தலைமறைவாகினர். இது குறித்து சரவணன் சிந்தாமணி போலீசில் நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

 

 

Tags : Madurai ,Malayammal ,Chinthamani, Madurai ,Saravanan ,
× RELATED 15 ஆயிரம் பேருக்கு 2000 உதவித்தொகை