திண்டுக்கல் மாவட்டத்தில் 47,000த்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 15,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதம் மாதம் ரூ,2,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர். மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளி நபர்களில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் தொகையாக ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து 511 மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் கூடுதல் தொகையாக ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
