×

சிறிய கட்சிகளை தாமரையில் நிற்க சொல்லி பாஜ நிர்ப்பந்தம்: போட்டு உடைத்த ஈஸ்வரன்

திருச்செங்கோட்டில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ தலைமையில் மதசார்பற்ற கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் ஈஸ்வரன் எம்எல்ஏ அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று, திமுக எங்களை நிர்ப்பந்திக்கவில்லை.

ஆனால், எதிரணியில் அதிமுக தனது சின்னத்தில் கூட்டணி கட்சியினரை நிற்க வேண்டும் என்று கூறுகிறது. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் இரட்டை இலையில் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும், தாமரையில் நிற்க வேண்டும் என்று பாஜ நிர்ப்பந்தம் செய்கிறது. எங்களை பொறுத்தவரை உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் வெற்றி பெற முடியும் என்ற நிலை தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : BJP ,Easwaran ,western district DMK ,Thiruchengode ,KMD General Secretary ,Easwaran MLA ,MLA ,DMK ,Tamil Nadu.… ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்...