×

என்னாது அண்ணாமலை கம்ப்ளைன்ட் தந்திருக்காரா? வானதி ஷாக்

பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க பாஜ தயாராக உள்ளது’’ என்றார். தொகுதிகள் ஒதுக்கீட்டில் நிலவும் அதிருப்தி குறித்த கேள்விக்கு, ‘‘கூட்டணி என்று வரும்போது சில விட்டுக்கொடுத்தல்கள் அவசியமாகிறது.

கட்சியின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டியது தொண்டர்களின் கடமை’’ என்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையே தொகுதி ஒதுக்கீட்டில் கருத்து வேறுபாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, ‘‘கட்சியில் எங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை. தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது’’ என்றார். பாஜவின் வேட்பாளர் தேர்வு முறை குறித்த கேள்விக்கு, ‘‘தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பெயர்கள் அடங்கிய பட்டியலை மாநிலக் குழு தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பும்.

மத்திய தேர்தல் குழு அந்தப் பெயர்களைப் பரிசீலனை செய்யும். இறுதிப் பட்டியல் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியாகும்’’ என்றார். அண்ணாமலை தொகுதி பங்கீட்டில் திருப்தி இல்லை என மேலிடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘‘தனக்கு அது பற்றி தெரியாது’’ என்று வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

Tags : Annamalai ,Vanathi Shock ,BJP ,National Women ,Wing ,President ,Vanathi Srinivasan ,Coimbatore ,National Democratic Alliance ,AIADMK ,
× RELATED சாவு கொடுமையா இருக்கும்; திமுக,...