நித்திரவிளை, மார்ச் 28: அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பது நமது கடமை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் சங்கர் தலைமையில் நகராட்சிக்குட்பட்ட நித்திரவிளை முதல் தெருமுக்கு வரை பேரணி நடத்தப்பட்டது . தொடர்ந்து நூறு சதவீதம் வாக்களிப்போம் என்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பேரணியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
