×

திருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.35 கோடி காணிக்கை

 

திருத்தணி: அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன்களை செலுத்திவிட்டு, உண்டியல்களில் தங்களின் பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, திருத்தணி முருகன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், நகை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை 28 நாட்களுக்கு ஒருமுறை எண்ணுவது வழக்கம்.

அதன்படி நேற்று கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷா ரவி, மோகனன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.1 கோடியே 35 லட்சத்து 97 ஆயிரத்து 219 ரொக்கப் பணம், 468 கிராம் தங்கம், 13.890 கிராம் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. இவை அனைத்தும் கோயில் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Thirutani Murugan Temple ,Thirutani ,Murugan Temple ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...