×

6ம் தேதி வரை தென் பகுதியில் லேசான மழை

சென்னை: காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக நேற்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. இன்று முதல் 6ம் தேதி வரை் அதே நிலை நீடிக்கும். 7ம் தேதியில் தென் தமிழகம், வடக்கு கடலோரப்பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

வடக்கு உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணபட்டாலும் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

Tags : Chennai ,South Tamil Nadu ,Western Ghats ,7th ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...