தஞ்சாவூர் : திருவையாறு அரசர் கல்லூரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு கோலமிட்டு தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
திருவையாறு அரசர் கல்லூரியில் வாக்குரிமை என் உரிமை, அதனை ஒருபோதும் தவற விட மாட்டோம், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று வண்ணக்கோலமிட்டு மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் டிஆர்ஓ தியாகராஜன், திருவையாறு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முருககுமார், தேர்தல் துணை தாசில்தார் கார்த்திபன், நகராட்சி ஆணையர் மதன்ராஜ் மற்றும் தேர்தல் அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
