ஊட்டி,மார்ச்27: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினி தரவு வழங்கிகளை படிப்படியாக புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கோவை மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின் கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின்சார இணைப்பு விண்ணப்ப சேவைகள் வரும் 28, 29ம் தேதிகளில் இயங்காது. இடையூறுக்கு வருந்துகிறோம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
