×

நாங்குநேரியில் பறிமுதலான ரூ.60 ஆயிரம் ஒப்படைப்பு

களக்காடு, மார்ச் 27: நாங்குநேரி சட்டமன்றத்தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் சுங்கசாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூரில் இருந்து கோவில் விழாவிற்காக சந்திரசேகர் என்பவர் வந்த காரில் இருந்த ரூ.60 ஆயிரத்துக்கு ஆவணங்கள் இல்லை என பறிமுதல் செய்து நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். உடனடியாக சந்திரசேகர் உரிய ஆவணங்களை திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்து பணத்தை மீட்க உத்தரவு பெற்று நேற்று மாலை நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் உத்தரவை காண்பித்து சார் நிலை கருவூலத்தில் இருந்து அவரது பணத்தை திரும்ப பெற்று சென்றார்.

Tags : Nanguneri ,Kalakkadu ,Nanguneri Assembly Constituency Election Flying Squad ,Chandrashekar ,Mysore ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...