×

திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், மார்ச் 27: இந்திய ராணுவத்தில் பணிபுரிய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2027ம் ஆண்டு இந்திய இராணுவத்திற்கு பொது பணி, டெக்னிக்கல், கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரெட்ஸ்மேன் (10ம் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதற்கு பதினேழரை முதல் 22 வயது வரை உள்ள திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் அடுத்த மாதம் ஏப்ரல் 1ந் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கூடுதல் விவரங்களை மேற்காணும் இணையதளத்தில் காணலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Tiruvarur ,Collector ,Mohanachandran ,Indian Army ,
× RELATED விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க...