×

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.59 ஆயிரம் பறிமுதல்

போடி, மார்ச் 27: போடி அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.59 ஆயிரம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போடி அருகே முந்தல் செக்போஸ்ட்டில் உதவி வேளாண்மை இயக்குநர் மணிகண்ட பிரசன்னா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, தேனியில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மூணாறு நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அதில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அண்ணராஜ்(26) இருந்தார். அவர் ரூ.59 ஆயிரம் பணம் வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

 

Tags : Bodi ,Assistant Director of ,Manikanda Prasanna ,
× RELATED கஞ்சா பறிமுதல்