×

பாஜக வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம் இறுதி செய்யும்: மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: பாஜக வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம் இறுதி செய்யும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், வேட்பாளர் யார் என்பதை கட்சியின் உயர்நிலை குழு கமிட்டி கூடி முடிவு செய்வோம். எங்களுடைய வேட்பாளர்களை அகில இந்திய பார்லிமெண்ட் போர்டு குழு முடிவு செய்யும். தேர்தல் அறிக்கை இரண்டு தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.

Tags : Delhi ,BJP ,Nayinar Nagendran ,Chennai ,President ,Tamil Nadu Assembly ,
× RELATED தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை...