×

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை திமுக குழுவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 தொகுதிகள் எவை என்பது தொடர்பாக தேமுதிக குழு, திமுக குழுவுடன் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா நேரடியாக பங்கேற்று, திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது தொடர்பாக அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : Demutika ,Dimuka ,Chennai ,Tamil Legislative Assembly ,Temuthiga ,Dimuka Coalition ,Demutika Group ,Dimuka Committee ,Anna Entwalayat ,
× RELATED அதிமுக காலி பாத்திரம், திமுக...